குறுங்கவிதை

.முத்துவேல

பச்சைக்கொடி காட்டவில்லை மரங்கள்,
வெட்டி சாய்க்கப்பட்ட பூமியில்,
பொய்த்துப்போனது மழை !

மறித்து போனது மனிதநேயம்,
தொப்புள் கொடி அறுக்கப்பட்ட பிள்ளையிடம்,
பெருகிபோனது முதியோர் இல்லம்!...

மனிததலைகளுக்கு இடையே மண்துகள்கள்,
விழிப்புணர்வு இன்றி,
மக்கள்தொகை பெருக்கம்! 

muthuvel_a2000@yahoo.co.in