அடிமைகளின் சாதனைகள்

மன்னார் அமுதன்                               
                                           
பெரும்பாண்மையான காலங்களில்
நாம்
அடிமைப் படுத்தப் பட்டிருக்கின்றோம்
பெரும்பாண்மையினரால்
...

உணர்வுகள் 
ஒடுங்குமளவிற்கான
அடிகள்
உள்ளும்
புறமும்

இருப்பினும்... 
இருப்பினும்
...
மார்
தட்டிக் கூறுவேன்..

மனித உரிமைக்காய் முழங்கும்
எம்மினத்தால்
தான்
ஊருக்கு
ஒதுக்குப் புறமாய் 
இன்னும்
வாழ்ந்து கொண்டிருக்கிறது
இரட்டைச் சுடுகாடு


amujo1984@gmail.com