தானாக எழும் பொறி.

வேதா. இலங்காதிலகம்.  டென்மார்க்.

எந்நேரமும் உள்ளே கனலும்
ஏதாவது செய்!..செய்! எனும்
எழுச்சியெனுமொரு நெருப்பு!
ஒரு நிமிடம் ஓய்ந்திடாது,
துருதுருவெனத் தூண்டிவிடும்
பெரு விருப்புடை எழுச்சி மனம்
ஒரு இறைவன் கொடை.

எள்ளளவும் மனிதனைத் தூங்கவிடாது
எத்தனமாகும் இந்நவநீத நெருப்பு.
எல்லையின்றி மனிதனை இயக்கும்
எந்திர வில்லானது இப்பொறி.
ஆரோக்கிய மனதில் தினம்
ஆரோகணிக்கும் அற்புத எழுச்சி.
ஆகாசத்தையும் தொடவைக்கும்
அற்புதம் ஆனந்தத் தன்முனைப்பு.

நன்கொடையாம் நன்னய நெருப்பு
நன்மார்க்க நல்வினைப் பொறி
நச்சு நச்சென்று யாரையும் தினம்
நச்சரித்து எழுவதல்ல இப் பொறி.


kovaikkavi@gmail.com