தெருமுனையில்; நின்று பார் போதும்!!

வித்யாசாகர்

1
நீ
அந்த தெரு வழியே
போனாயென்று எல்லோருக்கும் தெரியும்;
எனை பார்த்தாய் என்று
எனக்கு மட்டும் தானே தெரியும்..

சிலசமயம் நின்று
கடையில் ஏதேனும் வாங்குவாய்
அது எல்லோருக்கும்தெரியும்;
எதற்காக நிற்கிறாய், வாங்கினாய் என்று
எனக்கு மட்டும் தானே தெரியும்..

தெருமுனை திரும்பி எனை பார்த்ததும்
அடிக்கடி மணி பார்ப்பாய் -
வெறுமனே அலைபேசியை காதில் வைத்து
வீணே யாரையேனும் அழைத்துப் பேசுவாய்
அவசரமோ; நேரமாகி விட்டதோ போல்
எல்லோரும் நினைப்பார்கள்;

ஆனால் நீ அடிக்கடி பார்க்கும் மணியிலும்
அவசியமில்லாமல் அழைத்த அழைப்பிலும் தான்
எனக்கான காதலை -
அவ்வளவு வைத்திருக்கிறாய் என்று
எனக்கு மட்டுமே தெரியும்!!
----------------------------------------------------------------------------
2
தெப்படியோ
நான் விரைவாக வந்தால் நீயும் விரைவாக வருகிறாய்
தாமதமாக வந்தால் -
நீயும் தாமதாமாக வருகிறாய் -

மனதிற்கு மட்டுமே
நம்மை - சரியாக தெரிகிறது போல்!!!
----------------------------------------------------------------------------
3
நீ
அருகில் வருகிறாய்
உன் கால கொலுசு சப்தம் என் மீதேறி
காதுகளில் புகுந்து -
உடம்பெல்லாம் பதிவாகி வெளி சென்று
கடக்கிறது என்னை உன்னோடு!

அந்த கொலுசின் சப்தத்தில்
உன் பதட்டமும் நீயும்
புரியவில்லை -
இப்போது அமர்ந்து உன்னையும்
உன் கொலுசையும்
நீ என்னை நெருங்கி ஒதுங்கி அவசரமாய் கடந்ததையும்
எண்ணிப் பார்க்கையில் புரிந்தது -

நீ என்னை நிமிர்ந்து பார்க்காவிட்டாலும்
நாளைக்கு என்னருகே வந்து உடலெல்லாம் புகுந்து
விலகி
ஓடி
தெருமுனையில் நின்று
திரும்பிப் பார்க்காவிட்டாலும்
மனதில் நினைத்திருப்பாய் என்று!!
----------------------------------------------------------------------------

4
னக்கொன்றும் நான்
அத்தனை பெரிய -
அவசியம் இல்லை தான்;

போ..
நீ பெசாவிட்டாலென்ன,
பார்க்கா விட்டால் தான் என்ன?!!!!!!

எனக்கு நீ -
வாழுமளவு வேண்டும்;

இல்லையேல் -
உயிர் பிரியுமளவேனும்!!!
----------------------------------------------------------------------------

5
ன் வெளுத்த தோலோ
கருப்பு விழியோ
புது வண்ண ஆடையோ
மயக்கும்  அழகோ
உன் ஆர்பாட்டமோ
உன்னிடத்தில் காமமோ
காதலோ - ஒன்றும் வேண்டாம்

தினமும் இந்த வழியில் வந்து பொ; போதும்!!

 


vidhyasagar1976@gmail.com