புலரும்
விடியலுக்காய்...
த.எலிசபெத்
(இலங்கை)
அம்மாவின்
அதட்டல்களிப்போ
அதிகமாகி
விட்டது
அப்பாவும்
என்
பிரயாணங்களில்
அழுத்து
விட்டார்...
கைச்செலவு
அதிகமாகி
கடன்
வாங்குமளவு
பெரியவனாகி
விட்டேன்
பக்கத்துணைக்கு
நின்ற
அக்காவும்
அந்நியமாகிவிட்டதைப்
போல
தோன்றுகிறது...
அடுத்த
வீட்டுக்காரனின்
கேலிப்பேச்சு-என்னை
அவமானத்தில்
தள்ளிவிடுகிறது...
தபாலக
அலுவலர்கள்
சிலர்
எனக்கு
நண்பர்கள்
பெரிய
பெரிய
நிறுவன
முகவரிகள்
புதிய
புதிய
தெரு
விலாசங்கள்
பல
அதிகாரிகளி
னறிமுகம்-ஆனால்
நானின்னும்
விடையில்லா
வினாவாய்...
நான்
யாரென்று
புரியவில்லையா??
விடியலை
தேடும்
வேலையில்லா
பட்டதாரி....!!!
|