கவித்துளிகள்

கவிஞர் இரா .இரவி

ஏன்? என்று தெரியவில்லை

உனக்கு பிடிக்கின்றது
என்பதற்காகவே
கவிதை எழுதினேன்
எல்லோருக்கும் என்
கவிதைகள் பிடிக்கின்றது .
கவிதைகள் கேட்க
நீதான் அருகில் இல்லை
பிரிந்து சென்றாய்


எல்லாம் உன்னால்

பொறுப்பற்றவன்
பொறுப்பனேன் உன்னால்
ஊதாரியாய் சுற்றியவன்
உருப்பட்டேன் உன்னால்
புயலாய் இருந்தவன்
தென்றலானேன் உன்னால்
காற்றாறு வெள்ளமாய்
இருந்தவன்
ஓடும் அழகிய
நதியானேன் உன்னால்
என்னை ஆற்றுப்படுத்தி
வெற்றிப் பெற்றாய்
கடைசியில் ஏன்?
கைவிட்டுப் போனாய் !eraeravik@gmail.com