பிந்திய செய்திகள்

நாச்சியாதீவு பர்வீன்

பாரத்தின் சுமை
வாழ்க்கையை நசுக்கிய
சுவடுகள் வழியே
நிமிசங்கள் கரையும்.

காதல் வழியில்
கவனம் சிதறிய..
அநேகரின் செழிப்பும்
சிரிப்பும்..
வதனம் விட்டு கழண்டு
விதிக்குள் மறைந்து
காணமல் போய்விடும்

நேற்றைகள் சுகம்விசாரித்த
கணப்பொழுதின்
ஆரவாரம் பற்றி
இந்த நிமிசங்கள்
நினைத்துக்கொள்ளும்

காலம் சேமித்த
செய்திகளை
கேட்கும் நிலையில்
எந்த செவிக்கும்
அவகாசம் கிடையாது

கோட்டைகள் தோறும்
பூனைகள் அப்பங்களின்
காவலர்களாக ....armfarveen@gmail.com