ஹைக்கூ கவிதைகள்

கவிஞர் இரா .இரவி

வானிலிருந்து வரும்
திரவத்தங்கம்
மழை

இரண்டும் சமம்
மலை மண்
மழைக்கு   

கழுவும் நீரே
அழுக்கு
சுத்தம் ?

ஓய்வுக்கு ஒய்வு
தந்தால்
சாதிக்கலாம்

சாதனைக்கு
முதல் எதிரி
சோம்பேறித்தனம்    

தண்ணீரைப் பெட்ரோலாக்கி  
வித்தைக் காட்டியவரிடம்
வித்தைக் காட்டியது இயற்கை

எலி மீது யானை
எப்படிச்   சாத்தியம்
பிள்ளையார்

உருண்டது
உலோகக் குண்டென
தாமரையிலைத் தண்ணீர்

கருவறை உள்ள
நடமாடும் கடவுள்
தாய்

பல் பிடுங்கிய
பாம்பாக
தோற்ற அரசியல்வாதி

இன்றும் சொல்கின்றது
மன்னனின் பெயரை
அரண்மனை

பெருமூச்சு விட்டாள்
தங்கக்கோபுரம் பார்த்து
முதிர்கன்னி

கல்லுக்குள் தேரை
பறைக்குமேல் செடி
மனிதனுக்குள் மனிதநேயம் ?

       

eraeravik@gmail.com