சொல்லிவிடு

கீர்த்தி,
கொழும்பு 




எனை வெட்கப் பூக்கள்
சூடிக்கொள்கின்றன
உன் கண்களை நேராய்
சந்திக்க நேரும் தருணங்களில்!

பெண்மையே....!
உனக்குள் எத்தனை மென்மை
வியந்து போகின்றேன்
விடை காணாமலும் போகின்றேன்!

உன் குரலை கடன் வாங்கித் தான்
குயில்களின் காணமோ?
உன் நடையின் நழினம் வாங்கித் தான்
மயில்களின் நடனமோ?

உன் ஒவ்வொரு அசைவும்
அகிலத்தின் அசைவாக
உன் ஒவ்வொரு செயலும்
அலை மோடும் கடலாக
எனை ஆட்சி செய்கின்றன!

என்னவளே....!
எத்தனை நாட்கள் தூரமாய்
உனை அணைப்பேன்?
உன் பார்வைக் கணைகள் பட்டு
"பியுஸ்" இழ்ந்தும்
பிரகாசமாய் ஒளிக்கிறது
என் நாட்கள்!

பிரபஞ்சத்தின் பேரழகி நீயில்லை தான்
ஏனோ;
பிரம்மை இவன் நாட்களை
ஆட்சி செய்யும் பேரழகி ஆகிப்போனாய்!

மௌனத்தால் மொழி பேசும்
என் மங்கையே
உன் மௌனப் பூட்டை உடைத்து
மனதார சொல்லிவிடு
ஓரு வார்த்தை
" லவ் யூ" என....

எனக்கானவள் நீயென்பதை
என்றோ உணர்ந்து விட்டேன்
உனக்கானவன் நானென்பதை
நீ அறியும் நாளெதுவோ?



keerthyjsami@gmail.com