காதல் கவிதை

ஆ.முத்துவேல்

நீ என்னை காதலிப்பதாகச் சொன்னால்,
வானவீதியில், விளக்குகளாக
நட்சத்திரத்தை தொங்க விடுவேன்,

நீ என்னை காதலிப்பதாகச் சொன்னால்,
மின்மினிப் பூச்சிகளில் மின்சாரம் சேகரித்து,
அமாவாசையிலும் நிலவுக்கு வெளிச்சம் கொடுப்பேன் ..

நீ என்னை காதலிப்பதாகச் சொன்னால்,
உன் வீட்டு முற்றத்தில் நீ கோலமிடுவதற்கு ஏதுவாக,
கார்மேகத்தை அழைத்து வந்து,
மழை பொழியச் செய்வேன் ....

நீ என்னை காதலிப்பதாகச் சொன்னால்,
குளித்து முடித்த உன் கூந்தலின் ஈரத்தை உலர்த்த,
தென் மேற்கு பருவக்காற்றை, நீ இருக்கும் வீதியிலே,
திசை திருப்பி விடுவேன் ...

நீ என்னை காதலிப்பதாகச் சொன்னால்,
உன் பாதத்தில் பட்ட கால் தூசிகளை,
இதுவரை பிறந்த உலக அழகிகளின் உருவங்களாக எண்ணுவேன் ..

நீ என்னை காதலிப்பதாகச் சொன்னால்
மலையை பெயர்த்தெடுத்து,
ஆழி பேரலையும் உன்னை தாக்காதவாறு
உன்னை சுற்றி அரண் போல வீடு கட்டுவேன்,muthuvel_a2000@yahoo.co.in