கலியுக கடவுள்

.எலிசபெத (இலங்கை)

விண்வெளி தாண்டிய
விஞ்ஞானப்பயணம்
விடையில்லா
புதிர்களோடு
விஞ்ஞான
புத்திசாலிகள்
….

விசாலமான அறிவோடு
இயற்கையை
எதிர்த்தாலும்
ஜெயமென்னவோ
இயற்கைக்குத்தான்
  … 

விண்கல்லை தடுக்கவும்
வெள்ளப்பெருக்கை
முடக்கவும்
எரிமலை
குமுறலை குறைக்கவும்
பூமியதிர்வுகளை
அடக்கவும்-ஏனோ
விஞ்ஞான
மூளை
வெற்றுப்பெட்டகம்
தான்
… 

இறைவனை விஞ்சிடத்துடிக்கும்
இயந்திர
மனிதன்
கடவுளை
கல்லுக்குள்ளே அடக்கிவிட்டு
கலியுக
கடவுளாக மாறத்துடிக்கிறான்
!!! 

 

thangarajelizabeth@yahoo.com