நாகரிக நங்கையே...

.எலிசபெத (இலங்கை)

பொன் நகையால்
அலங்கரிக்கும்-பெண்ணேயுன்னை
புன்னகையால் அலங்கரித்திடு
முக அழகுமட்டுமல்ல
அக அழகும் மிளிர
அகமகிழ்வாய்...

சிங்கார நடைபயின்று
சிற்றின்ப சுகம்தேடி
சீரான உன் குடும்பத்தை
சீர்படுத்தும் வழி மறந்து
சீரழியும் இவ்வுலக சிக்கலில்-நீயும்
சிக்கித்தவிப்பதென்ன....

குடும்பமெனும் கூட்டில்
குத்து விளக்காய் ஒளிபரப்பி
குலவிளக்காய்-நீயும்
மிளிர மறுப்பதென்ன..??
நாகரிக மங்கையாய்
நகர் வலம்வருமுனைக் காண
நகைப்பாய்த்தானிருக்கிறது...

கவர்ச்சியும் அழகும்
கட்டுக்கோப்பான உடலிலல்ல-பெண்ணுக்கு
கட்டுப்பாடான உணர்வுகளிலே...
கற்பை உயிராய் மதிக்கும்-பெண்ணுக்கு
பெறுமை சேர்க்கும் புகழான
கண்ணியத்தை
களங்கப்படுத்திவிடாதே-பெண்மையை
காயப்படுத்திவிடதே....!!!!

 

thangarajelizabeth@yahoo.com