வாழ்வின் அர்த்தம்

மன்னை மீனா சுந்தர்                        

மரங்களடர்ந்தக் காட்டில்
குறுக்கும் நெடுக்குமாய்
ஒழுங்குகளற்று நீண்டிருக்கும்
கூரிய முட்களுக்கிடை
உள் நுழைந்து
இரை தேடி
பசியாறி வெளியேறும்
சிட்டுக் குருவிகள்
சொல்லி விட்டுப் போகின்றன
வாழ்க்கை வடிவத்தையும்
வாழ்தல் அர்த்தத்தையும்.
 

danushrk@yahoo.com