நிஐங்களைத் தேடி

துறையூர் காசி, பிரான்ஸ்

வந்தேறு குடிகள் நாம
வாடகை நாடிது
நிறங்களை மாற்றி
நிஐங்களை தொலைத்தோம்
அகதிகள் என்றோர்
அடையாளம் நமக்கு
அவசரமாக
அசலை தொலைத்து
நாமே விரும்பி
சூட்டிய நாமம
சொந்த மண்ணின்
சுகமிங் கேதடா
நமது தேசம்
நல்லதோர் வாசம்
அதற்கிணையாகுமா
அன்னிய தேசம்
மனதைத் திறவுங்கள்
மனிதரே சொல்லுங்கள்
இது ஒரு வாழ்வா?
இதில் ஒரு சுகமா?
சிpறைக் குள்ளே ஓர்
சுதந்திர வலயம
நமக்காய் நாமே
எழுதிய கோலம்
புறப்படு தோழா
பிறந்த பொன் நாடதனை
பொன் விளையும்
பூமியாக்க.....


isaak1948@numericable.fr