உதடுகள

ராசை நேத்திரன்.....

உன் உதடுகள் சுருங்கி
விரியும் நீளத்தில் என் உலகம்
அளவிடப்பட வேண்டும்...

உன் செவி மடலின்
மடிப்புகளில் கூட புதைக்க
படுகின்றன உன்னை பற்றிய
என் காதல்

உன் புருவ நீள வளைவுகளின்
அடர்த்தியில் என் இரவு கனவுகள்
உயிர் பெறுகின்றன

நீ அணிய வாங்க போவதாய் எண்ணி
நகை கடையில் தோடுகளும்,
மூக்குத்திகளும் காத்து கிடக்கின்றன....

என் பேனா கூட உன் மேல்
உள்ள காதல் உணர்வதால்
என் எண்ண ஓட்டங்களில்
சிலிர்க்கிறது ....

உன்னை பற்றிய என்
காதல் உன் உதடு மடிப்புகளின்
ஆழங்களில் ஒளித்து வைக்கபடுவதால்
தான் நீ சிரிக்கும் போது மட்டுமே
என் காதல் உணர்கிறேன்....senphysio1981@gmail.com