சுற்றுச் சுழல் விழிப்புணர்வு ஹைக்கூ    

கவிஞர் இரா .இரவி

முயன்றால் சாத்தியமே
மரணமில்லாப் பெருவாழ்வு
சுற்றுச் சுழல் பேணல்

வீடு தெரு ஊர்
சுத்தமானால்
ஓடிவிடும் நோய்கள்

தீமையின் உச்சம்
மக்காத எச்சம்
பாலித்தீன்

உணர்ந்திடுக  
மரம் வெட்ட
மழை பொய்க்கும்   

கரும் புகை
பெரும் பகை
உயிர்களுக்கு

கண்ணுக்குப் புலப்படாது
புலன்களை முடக்கும்
கிருமிகள்

தெரிந்திடுக
காற்றின் மாசு
மூச்சின் மாசு 

இயற்க்கை வரத்தை
சாபமாக்கிச் சங்கடப்படும்
மனிதன்

அறிந்திடுக
சுத்தம் சுகம் தரும்
அசுத்தம் நோய் தரும்  

புரிந்திடுக
செயற்கை உரம் தீங்கு
இயற்க்கை உரம் நன்கு  

கட்சிக் கொடிகளை விட்டு
பச்சைக் கொடிகளை வளருங்கள்
பசுமையாகும்

மதிக்கத் தக்கது
ரசனை மிக்கது
ரசாயணமில்லா விவசாயம்

வேண்டாம்   வேண்டாம் 
பூச்சிக் கொல்லி மருந்து
மனிதனையும்  கொல்கிறது

தாய்ப்பால்   இயற்க்கை உரம்
புட்டிப்பால் செயற்க்கை  உரம்
வேண்டாம் உலகமயம்eraeravik@gmail.com