ஹைக்கூ     

.சந்திரா

சமையல் உலகின்
சாம்ராஜ்ய ராணி
உப்பு!.

விலை குறைந்தாலும்
சுவை குறையாத
சொக்கத்தங்கம் உப்பு!

சத்தியாகிரகத்திற்கு
துணைநின்ற அஹிம்சை
ஆயுதம் உப்பு!

எந்த நிறத்தையும்
ஏற்கும் சமரசப்பிறவி
காகிதம்!

சேரிமக்களின் சட்டையிலும்
சேட்டின் கோட்டிலும் இருக்கும்
சன்மார்க்கப்பிறவி பொத்தான்!

வார்த்தைகளை விழுங்கிக்கொண்டு
ஆயிரம் அர்த்தங்களை வெளிப்படுத்தும்
அற்புதம் மௌனம்!