மறுமலர்ச்சி எப்போது...

.எலிசபெத (இலங்கை)

மாட்டுக்கும் பெண்ணுக்கும்
இல்லை
வித்தியாசம்
இவ்வுலகில்
இரண்டுமே
வியாபாரமே ….

பெண்ணின் கனவுகளை
காற்றலையில்
பறக்கவிட்டு
காலனவன்
கைப்பிடியெனும்
திருமணச்சந்தையில்
….

வேடனவன் வலையில்
சிக்கிய
மானைப்போல
சீதன
வலையில்
சிக்குண்ட
மங்கையவள் ….

என்று மறுமலர்ச்சி-பெண்கள்
வாழ்வு
மலர
என்று
விடியல்-பெண்கள்
பெறுமை
சிறக்க ….

 

thangarajelizabeth@yahoo.com