கருவறையில் ஒரு கண்ணீர்....

விஜய் சேசுலா

மன்மதர்களின்
ஆசை நாயகியாக
நீ வாழ்ந்ததால்
தாயே !
உனக்கு எய்ட்ஸ்
உன் கருவில் இருக்கும்
எனக்கும் எய்ட்ஸ் .

நீ
செய்த பாவம்
என் தலைமேலும் விழுந்தது

பரிசுத்தமான கருவறையில்
அசுத்தமாக நான் !

அழகான பூமியில்
அசிங்கமாக - நான்
பிறக்க போவது தெரியாமல் -
பாசமாக கொஞ்ச வேண்டிய
சொந்தங்கள் பரிதாபத்தோடு
என்னை பார்க்க போவது
தெரியாமல் -
மரணத்தை
நெருங்கி கொண்டிருப்பது கூட
தெரியாமல் -
கருவறையில்
மகிழ்ச்சியாக தூங்குகின்றேன்

குழந்தை பிறந்த பின்னால்தான்
ஜாதகம் எழுதுவார்கள்

ஆனால்...!

கருவறையில் இருக்கும் போதே
என் ஜாதகம்
எழுதபட்டுவிட்டதம்மா
ஆயுளும் குறிசாச்சம்மா

கருச்சிதைவு செய்து
என்னை கொல்லாமல்
ஏன் தாய் எனக்கு
உயிர் தந்தாய் ?

என் பிஞ்சு இதயத்தை
எய்ட்சின் நஞ்சு கிருமிகள்
கொத்தி கொத்தி தின்பதற்காகவா ..!

சாகபோகும் எனக்கு
பெயர் வைத்து -
ஒரு பெயரை வீணாக்கிவிடதேயம்மா

அப்படி எனக்கு
பெயர் வைப்பது
என்னை கொஞ்சி மகிழ்வதற்காகவா ?
இல்லை !
கல்லறை மேல் பொறிக்கப்படத்தானே..

கவசத்தோடு பிறந்தவன்
'கர்ணன்' என்று
பெயர் பெற்றதுபோல் -
எய்ட்ஸ்சோடு பிறக்கும்
எனக்கு -
' எய்ட்ஸ் ' என்று
பெயரை வையம்மா

நரகத்தில் போகும்
உன்னோடு - ஒரு
பாவமும் செய்யாத
நானும் வருவேன் ..
என் பாசம்
உண்மையானது தாயே

எனக்கு
ஒரே ஒரு வருத்தம்தான்..
' அம்மா 'என்றழைக்கும் வரை
நான் உயிரோடு இருப்பேனா ?
இல்லை -
நீ உயிரோடு இருப்பாயாயென்று

இந்த சோகங்களிலும்
ஒரே ஒரு சந்தோசமம்மா
எனக்கு
உயிர் தந்த
உன் முகத்தை
பார்க்க போகிறேன் என்று

ஓ!
இதயம் இல்லாத இறைவனே -
பல ஆண்டுகள்
தவம் இருந்து -
நான்
கேட்ட மனித பிறவியை -
எய்ட்ஸ்சை தந்து
அழித்துவிட்டாயே
என் தவத்தில்
குற்றம் கண்டாயோ ...vijaysesula@gmail.com