தொலைவு

அமிர்தா

கையெட்டும்
தூரத்தில்தான்
இருக்கிறது.
கையை
மூளையால் ஒடுக்கி
மூளையை
மனதால் திருப்பி,
மனதை
அறிவால் ஆக்கிரமித்து
ஒடுங்கிக்
கொண்டேயிருந்தாலும்
கையெட்டும்
தூரத்தில் தான்
இருக்கிறது
எல்லாமே.


 

indira.alangaram@gmail.com