ஹைக்கூ கவிதைகள்

கவிஞர் இரா .இரவி

உடன் நிறுத்தியது
குழந்தையின் அழுகையை
பொம்மை

விசமாக இருந்தாலும்
அழகுதான்
அரளிப் பூவும்

கூறியது
வரலாறு
குட்டிச்சுவரு

உருவம் இன்றியே
தாலாட்டியது
தென்றல்

பிரிவினை விரும்பாதவள்
இணைந்தே இருக்கும்
இரு புருவமும்

பட்டப் பகலில்
கூவியது சேவல்
கணினிப்
பொறியாளனுக்கு

இங்கு பெய்த மழை
அங்கு பெய்யவில்லை
இயற்கையின் அதிசயம்

அசிங்கம்தான்
அனைவருக்கும்
அந்தரங்கம்

உருப்படியான
ஒரே திட்டம்
நான்கு வழிச் சாலை

அனுமதிக்கவில்லை
ஊருக்குள்
காவல் அய்யனாரை

வருமானத்தைவிட
கழிவால் தீங்கு அதிகம்
ஆலைகள்

அழகைக் கூட்டியது
காதோரம் பறந்த
அவள் சிகை

இடித்த பின்னும்
பயன்பட்டது வீடு
நிலை சன்னல்eraeravik@gmail.com