எதிர்காலம் உனக்காக காத்து கிடக்கிறது

வேலணையூர் தாஸ்

காலை எழுதலும் கடைமைசெய்தலும்
மனையில் மங்கலம் பேணி நடத்தலும்
மாலையில் பிள்ளையின் கல்வியில்
ஆசானாகி அரும்பணி புரிந்து
மங்கல விளக்காய் ஒளிர்ந்த மங்கயர் திலகமே
ஏன் இப்படி மாறிப்போனாய்
சின்னத் திரை உன்னை சீர்கெடுத்ததுவா
தொன்மையாய் பேணிய நின் அரும் பண்பை
தொடர் நாடகங்கள் தொலைத்ததா தோழி
குறைந்தது ஆறு மணி நேரம்
தொலைக்காட்சி அருகில் தொலைகிறாய்
மையெழுதும் கண்கள் குழிவிழுந்து
வெய்யில் படாமல் முகம் வெளிறி
சோகையாய் ஏன் சோர்ந்து கிடக்கிறாய்
மெட்டி ஒலி பார்க்கும் போது
பிள்ளை கத்தும் ஒலியும் கேட்பதில்லை உனக்கு
அத்தை பார்பதற்காக சொந்த அத்தையையே
அடுப்படியில் அடகுவைக்கிறாய்
சொந்த உறவிற்காக கலங்காத உன் கண்கள்
ரிவீ கதாநாயகிக்காக கலங்குகிறது
இதை எண்ணி என் இதயம் கலங்குகிறது
சித்தி பார்ப்பதற்காக உன் வீட்டில் கிராமமே கூடுகிறதே
உன் பிள்ளை பரீட்ச்சையில் சித்தியடைவானா
நதி எங்கே போகிறது கூட விடுவதில்லை நீ
பெண்ணே உன் விதி எங்கே பொகிறது
நாடகத்தில் வயித்தபடி கணவன் தேனீருக்கு
உப்பு போடுகிறாய்
உப்பிட்ட உன்னை உள்ளளவும் நினைப்பானா

கற்பனையில் அழுது சிரித்து என்ன வாழ்க்கை
விழித்தெழு விழியில் ஒளியேற்று
நி்ஜத்துக்குவா
உனக்காக எத்தனை கடமைகள்
எதிர்காலம் உனக்காக காத்து கிடக்கிறது.
                                                                    

 

drsothithas@gmail.com