விளங்குமா ?

அ.இளஞாயிறு

த‌ற்குறித் த‌மிழ‌னின் 
தளராத உழைப்பிலான‌
விவ‌சாய‌ உண‌வை
உண்டுகொண்டே உள‌றுகிறான்
ந‌க‌ர‌த்துத் த‌மிழ‌ன்
'ஆங்கில‌மின்றி வாழ‌முடியாது'

ஈழத்தமிழனின் அழிவை
காக்க கையாலாகாத
ஈனத் தமிழனின்
'கூனி'ப் பிழைப்பால்
மின்வேலிக்குள்
பிச்சையெடுக்கும் இனத்தமிழன்

தனியார் விற்பனையில் கல்வி
வங்கிக் கடனில் பட்டம்
அரசுக் கடைகளில் மது
இலவச டிவியில் பெண்கள்
விவசாய நிலங்களில்
தொழில் பூங்காக்கள்

தனி ஈழத்தை
ஆர்வமாய் எதிர்பார்த்து
அடங்கிப்போனான்
களம்காண முயற்சிக்காத
முட்டாள் தமிழன்.....
விளங்குமா நாடு...மொழி..இனம் ?

 

aatruneer@gmail.com