வெற்றி

ஆர்.ஈஸ்வரன், வெள்ளகோவில்.

உன்
மன நிலத்தை
மன அழுத்தம் தீர
நன்றாக
உழு

அவநம்பிக்கை என்கிற
களையைப் பொறுக்கி
எடு

நம்பிக்கை என்கிற
உரத்தைக் கலக்கி
விடு

இலட்சியம் என்கிற
விதையை ஊன்றி
விடு

உழைப்பு என்கிற
நீரை
விட்டுவிடு

வெற்றி எனும் செடி
வேரூன்றி வளர்ந்துவிடும்.

 

pr_eswaran@yahoo.co.in