அடைமழை!

முனைவென்றி நா சுரேஷ்குமார்,

அடைமழை பெய்து
அப்போதுதான்

ஓய்ந்திருந்தது
!

அலுவலகம் முடிந்து
வீடு
திரும்புவதற்காய்
சாலையோரமாய்
நடந்தேன்!

என் கைகுலுக்கிவிட்டு
தேநீர்
அருந்தச் சொன்னது
தென்றல்
!

ஸ்ட்ராங்காய்
ஒரு
டீ குடித்தவுடனே
மீண்டும்
கிளம்பினேன்
சாலையோரமாய்
நிறுத்திவைத்திருந்த
நடராஜா
சர்வீசில்...!

பூக்கடைப் பெண்மணி
உரக்கக்
கூவினாள்
நான்கு முழம்
பத்து
ரூபா...
நான்கு
முழம்
பத்து
ரூபா...’
என்று
!

கடந்து போகயிலே
அவள்
முகம் பார்த்தேன்
கூவியபடியே

அவள்
கண்கலிளிருந்து
மீண்டும்
வலுத்தது
அடைமழை
...!!munaivendri.naa.sureshkumar@gmail.com