கனவு  

ஜுமானா ஜுனைட், இலங்கை.

வெகு தூரப் பயணம்.. இது…                                                                       
ஆனால்
ஒரே இடத்தில் இருந்து கொண்டே                     
பயணம் செய்யும் வினோதம்

இங்கு தான் -
கண்கள் இரண்டை மூடினாலும்
பார்வை வரும்
ஒளி முதல்கள் இல்லாமலே
வெளிச்சம் வரும்
வாய் கூடத் திறவாமலே
வார்த்தை வரும்… 

ஓராயிரம் குண்டுகள் வெடிக்கும்
ஆனால்
ஒரு சலனமும் இருக்காது
ஒரு மொட்டு மலர்ந்து விட்டால்
எத்தனை கோடி சப்தங்கள் இங்கே

தொலை தூரப் பயணம்.. இங்கே
தொடுவானில்
தொங்கு பாலம் தொங்கும்அதிலே
குதியிலாமல்
உடல் மட்டும் நடைபோடும்…!

 

jjunaid3026@yahoo.com