ஞானத்திற்கும் ஒருபடி கீழே..

மா.மணிகண்டன

தேர்வு அறைகள்
இன்னும் விசித்திரம்
அடைந்துகொண்டே போனது
நேரம் சிலரை விரட்டிக் கொண்டே இருக்க
பந்தயக் குதிரையின் பாய்ச்சலில் 
லகான்கள் இல்லாத பேனா தான் பாவம்..
இன்னும் சிலரோ
ஜன்னல் கம்பிகளில்
நினைவுகளை படியவைத்து
அலுத்துப்போன கணங்களில்
தேநீர் குடித்து
வடை முடித்த
இளம்பெண்
மேற்பார்வையாளர் பக்கமாய் பார்வை சறிக்க 
யாரோடு குறுந்தகவல் செய்து சிரிக்கும் அவள்..
அது யாரோ??
வினாத்தாளிற்கு போல்
இதற்கும் விடையற்று
சலனமின்றி நேரத்தை விரட்ட
கடினமாய்த்தான்  இருந்தது
இதற்கேனும் படித்திடலாமோ????
ஞானத்திற்கும் சற்றே ஒரு படி கீழாய்  
தோன்றி மறைந்தது ஏதோ ஒன்று....namashmani@gmail.com