உனக்காகவே வாழ்ந்திருப்பேன்

T.கவிதாயினி கார்த்திகா

கார்மேகக்குழல் சரிந்து விளையாடும்
சந்தன
மேனியில்
முத்தமிட்டுக்
கொண்டிருக்கும்
நெற்றி
குங்குமத்தில்
வியர்வை
கோலமிடுவதைப் பார்த்து,
இளவேனிற்காலத்
தென்றல் ஓடிவந்து ,

ஆடை மட்டும் தீண்டிய
நங்கையின்
தேகத்தில்
ஆசையை
வருடிச் செல்வதை
உணராமல்
...
தனிமையில்
பெண்னொருத்தி
பொழுது
மெல்ல சாயுங்காலத்திலே
நதியோரம்
அமர்ந்து
காண்பவர்
மயங்கும் வண்ணம்
கற்பனையின்
உச்சமாய்
பிரம்மன்
செய்த மீன்விழியில்
கண்ணீர்
வழிந்தோட..
அக்கரையில்
 யாரையோத்தேடி  காத்திருக்கிறாள்!

செந்தாமரை மலரின்
வர்ணம்
குலைத்துப்பூசிய
காரிகையின்
செவ்விதழ்
காற்று
தழுவியே
வெளுத்து
போன பின்னும்
என்னிடம்
மறுமொழி கூறாமல்
மறைத்துவிட்டாள்
!

காமன் காதல்கொள்ளும்
காட்டழகி
!
ஏதோ
நினைவால் ஆகாரம் மறந்து
இடைமெலிந்த
வேளையிலே
தொழி
என்றாள்!

மனதின் இன்பம் வற்றி
மயக்கம்
வந்த நிலையிலும்
இனிமை
குன்றாத குரல் கேட்டு
ஏனடி
என்றேன்!

ங்கிருந்தோ...
என்
காதலன் வருவான் !
என்னைக்
காண ஏங்குவான்!
அவனிடம்
..
எப்போதும்
உனாக்காகவே அவள் காத்திருப்பாள் காலமிருந்தால் வாழ்ந்திருப்பாள்
என்று
சொல்லிவிட்டு
எங்கயோ
சென்றுவிட்டாள்!

நானும் வழியருகே இருந்து
தேடுகிறேன்
!
யாரும்
வரவில்லை
இவள்
மென்மை
உணராத
ஆண்மையை எங்கேத்தேடுவேன்!