1.காலம் ஒரு கணந்தான்….!  பகுதி(2)     

ஜுமானா ஜுனைட், இலங்கை

நல்லன எண்ணு
பொன் என மின்னு
தண்மதி போல்
ஓரழகிய உள்ளம் வை
தாமதியாமல்
ஓர் இலட்சியம் தனை வகு..
அதையடைவதற்காய் என்றும்
அயராமல் முனை

இன்பம்
உனை மறந்து
தூர ஓடினாலும்
இருவிழிகளும்
ஆறு போல்
ஆகினாலும்
வாழ்வின் நிலையாமை
உணர்
பூந்துணர் போல்
வெற்றி மலரும்,
பாடுபட்டால்
இருள்கள் புலரும்..

ஆயுள்
நீண்டுசெல்வதில்லை
அறிந்து கொள்..
வாழ்வே ஒரு
நீர்க்குமிழி..
அதற்குள் எதற்கு
காட்டு வழி”..?
முடிந்தால் பிறர்க்கு
காட்டுவழி” …! 

கதிரோன் சுட்டதென்று
பூமி
அழுததில்லை..
இலைகள்
காய்வதனால்
இன்பமாய் பறத்தல் காண்

நதிகள் நெலிவதனால்
அழகு
குறைவதில்லை
தோல்வி
கலப்பதனால்
வாழ்வு வளம் பெறுமே

 

jjunaid3026@yahoo.com