நெஞ்சிற்கு நீதி

மன்னார் அமுதன்    
             
                               
கஞ்சிக்கும்
கூழுக்கும் நீதியொன்று - பணம்
காய்த்த
நல் மரத்திற்கு நீதிவேறு - என
நெஞ்சினைக்
கல்லாக்கி நீதி சொல்லும் -அந்த
நீதிமான்களைக்
காலம் வெல்லும்

கிஞ்சித்தும் அஞ்சாமல் கொடுமை செய்யும்
கீழான
மனிதர்தம் பாதம் தொட்டு - நல்ல
மேலான
பதவிகள் கேட்டுநிற்கும்- இவர்கள்
நிலையினைப்
பார்த்தாலே உள்ளம் வெட்கும்

பாருக்குள் எங்கோவோர் மூலையிலோ -நல்ல
பண்புகள்
கொண்டவரைச் சாலையிலோ -கண்டு
கதைக்கையில்
ஒருதுளி நீர்திரளும் -அந்த
நீரினில்
ஒருபுறம் நீதி தவழும்amujo1984@gmail.com