தீபத்து ஒளியாக ஒளிரவேண்டும் மனம்!

தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்

தீபத்து ஒளியாக ஒளிரவேண்டும் மனம்!
தீயவைகள் அழிந்தொழிய வேண்டும்!
சாபங்கள் தரணியினின் ஒழியவேண்டும்!
சந்ததம் போரின்றி வாழவேண்டும்!

வாழ்வினில் கண்டிட்ட பலஅகவைகள்
வடிவாகக் கண்டது தீபங்கள்மட்டுந்தான்!
சூழ்கலி நீங்கி சுடர்ஒளிபெற்று - பாவம்
சுற்றிவீசிட தீபத்திருநாள் வேண்டும்!

சாதிகள் நிலத்தினின்று நீங்கிட நாம்
சமத்துவமாய் ஓரணி நின்றிட வேண்டும்!
போதைதரும் இனவாதம் எரித்திங்கு
புகழோங்க நல்லன செய்திடல் வேண்டும்!

மாசிலாதார் மனங்கமழ வேண்டும்
மடமைகள் நாளுங் கழிந்திட வேண்டும்
ஊசிமேனின்றேனும் உண்மைக்காய்
உயிர்பிரிந்திடினும் நல்லன ஆற்றவேண்டும்!

மலர்ந்திடும் தீபத்திருநாளில் வையகம்
மணந்தெங்கும் நல்லனசொல நாமின்று
நிலத்தினின் நல்லன ஆற்ற வேண்டும் - எம்மில்
நிலைத்துள அசுர குணத்தை அழிக்க வேண்டும்!

புலர்ந்திட வுன்னும் தீபத்திருநாளன்று
புலகாங்கிதம் தாமடைந்து மக்கள்
எல்லீரும் நல்லீராய் நிலமீதில் நீடுவாழ
எழுத்தறியா அடியேன்யான் வாழ்த்துதிர்த்தேன்!ismailmfairooz@gmail.com