பெண் சுதந்திரம் !!!

பி.தமிழ முகில் நீலமேகம்

பொன்னான வாழ்வு கிட்ட
பொன்
கொட்டிக் கொடுத்த போதும்
பெண்ணணங்கு
எப்போதும்
புண்பட்டுத்
தான் துடிக்கின்றாள் !!!
பெண்ணாலேயே
கீழ்மைப்பட்டு
பெண்ணுக்குப்
பெண்ணே எதிரியென்று
பெயர்தனையும்
எடுக்கிறாள் !!!
பெண்ணவளின்
சிந்தனை
தன்
பிள்ளை தன் குடும்பம் வரை
சுதந்திரமாய்
இருக்க - ஏனோ
மருமகளாய்
புது வாழ்வில்
அடியெடுத்து
வைக்கும் வனிதைக்க
அடிமைச்
சங்கிலி பூட்டிப் பார்க்க
எத்தனித்திடல்
முறையோ ??
யாம்
பெற்ற இன்பம் -
பெற்றிடுக
இவ்வையகம் !!
இவ்வெண்ணம்
நலம் ! - ஆனால்
யாமடைந்த
துன்பம் துயரமெல்லாம்
என்
வழியே உன்னையும் 
நிச்சயம்
வந்தடையும் !!!
இவ்வெண்ணம்
கொள்ளுதல் தகுமோ ??
இந்நிலையும்
மாறும் நாளில் தான்
ஏற்படுமே
முழுமையான
பெண்
சுதந்திரம் !!!
 

muhilneel@gmail.com