நோன்பு மாதம்......!. .

கலைமகள் ஹிதாயா றிஸ்வி
 

வீடுகள் தோறும் உள்ளங்கள் மகிழ்ந்து
இனிதே போற்றிடும் நோன்பு - அது
செல்வர்கள் வறியவர் தீப்பசி யுணர்ந்து
திருந்திட அருளிடும் மாண்பு

மண்ணறை முஸ்லிம் மாந்தர்கள் கூடி
வாழ்த்தி வரம் பெறும் திரு நாள்-அது
தண்மதி நபிகள் நாயகம் தந்த
தவத்தால் உயர்ந்தருள் பெருநாள்!

வருடங்கள் தோறும் உருவங்கள் வேறாய்
வந்திடும் பன்னிரு மாதம் -அதில்
அருளொளி வீசி திருமறை ஓதி
அலர்வது ரமழான் மாதம்!

வாழ்வினை யுணர்ந்து தாழ்வினை மறந்து
வாழ்ந்திட வழிகளை காட்டும் -அது
கூழெளினும் ஏழை குடித்திட ஈயும்
குணத்தினை வளர் த்திடும் வேதம்!

தூய நபி சொல்! ' நேய இஸ்லாம்''
துதித்திடும் ரமழான் மாதம்-அது
தீயவர் நெஞ்சம் திருந்திடப் பண்ணும்
திருமறையருள் நிதம் பொங்கும்

 


sk.risvi@gmail.com