காவியக் கவிஞனே...

புதுவைப்பிரபாதிருவரங்கத்தில் பிறந்த
பாட்டுச் சுரங்கமே!

தலைமுறைகள் கடந்து
திரைத்துறை ஆண்ட
கவிதைச் சிங்கமே!

மரணத்திற்கு எப்படி மனது வந்தது
உன்னைத் தீண்ட?

நீ..
நினைவு தப்பி இருந்ததன்பொருட்டே
இந்த உயிர் திருட்டு நிகழ்திருக்கிறது.
இல்லையேல்..
வந்த மரணத்தையும்
பக்கத்தில் அமர்த்திக்கொண்டு
நீ வாழ்த்துப்பா பாடியிருப்பாய்
கவிப்பூமாலை சூடியிருப்பாய்

கடுமையாய் விமர்சிப்போரைக்கூட
மனம் நோகடிக்கும் நோக்கம்
கொண்டிரா உன்னையா
காலம் சாகடித்துவிட்டது?

இளைய கவிகளையும்
உடன் இணைத்துக்கொண்டு
ஊக்கமளித்த படைப்பாளா...
உன் இடத்தை இட்டு நிரப்ப
இன்னொருவர்தான் கிடைப்பாரா?

என்பது அகவையிலும்
பதினெட்டுக்கு பாட்டெழுதிய கவிஞனே!
பார்த்தாயா...?
நீ இறந்த தேதியும்
பதினெட்டு.

வார்த்தைக்காக
பாட்டெழுதுவோர் மத்தியில்
பலர் வாழ்க்கைக்காக
பாட்டெழுதிய பண்பாளா!
மரணம் உன்னை அழைத்துப்போனதேன்?
உன் மீது கொண்ட அன்பாலா?

மன்னிக்க முடியாத பெரும்பிழை
செய்துவிட்டது
மரணம்
இனி...
பாடல்களெல்லாம் பல்லவியோடு சரி.
எங்கிருந்து வாய்கப்போகிறது சரணம்?puthuvaipraba@gmail.com