ஊமைக்காதல்

விஜய் சேசுலா

என் காதலை
சொல்ல வார்த்தையில்லை
என்
இதய துடிப்பின் ஓசையை
யாராவது மொழிபெயர்த்தால்
என் காதலின்
ஆழம் புரியும்

என் சுவசகாற்றை
பிடித்து
கண்ணாடி குப்பிக்குள்
அடைத்து வைத்தால்
அன்பே
உன் முகம்
தெரியும்

மௌனத் தீ
காட்டுத் தீயாக பரவி
உயிரின் அத்தனை
அணுக்களையும் எரித்துப்
போட்டது

கருகிய இதயத்தில்
புன்னகை நிலவாக
உன் முகம் ஒளிர்வதால்
இன்னமும் வாழ்கிறேன்

கடலுக்கு தூது போக
அலைகள் இருக்கு
வானத்திற்கு துது போக
மழைகள் இருக்கு
மலருக்கு துது போக
வாசனை இருக்கு

ஊமை எனக்கு
துது போக
மொழிகள் யாவுக்கும்
நாவு இல்லை

' அம்மா ' என்றழைக்க
முடியவில்லை என்றும்
கடவுளை வாழ்த்த
முடியவில்லை என்றும்
ஒரு போதும் நான்
வருந்தியதில்லை

அன்பே !
உன் பெயரை
சொல்ல முடியவில்லையே
என்றுதான் எனக்கு
பெரும் வருத்தம்

கண் ஜாடையால்
என்னை அளப்பதும்
புன்னகையால் ஸ்பரிசம்
தருவதும்
சைகைகளால்
அறிவை குழப்புவதும்
எத்தனை நாளைக்கு
அன்பே ?

நெருங்கி வர
உன்னை தடுப்பது
மண்வாசனை வெட்கம்
என்னைத் தடுப்பது
பிறவி குற்றம்

உயிரே !
நான்
ஊமையென அறிந்ததும்
என்னை
உதாசீனபடுத்துவாயோ ....?

நீ
காதலிப்பது
என்னைத்தானா
இல்லை
என் வார்த்தைகளையா ?

 

vijaysesula@gmail.com