அது அவர்கள் உலகம்

துவாரகன்

அழு
வாய்விட்டு அழு
கண்ணீர் தீரும்வரை அழு
நெஞ்சடைக்கும் பாரம் குறையும்வரை அழு

உன் உண்மை முகத்திலிருந்தும்
ஈரம் நிறைந்த உள்ளத்திலிருந்தும்
எழுந்து வரும் கண்ணீரும் ஓலமும்
உனக்கான உலகம் என்றாகிவிட்டது.

அது அவர்களின் உலகம்
அந்த உலகின் சொற்கள் நஞ்சூறியவை
அந்த உலகின் முகங்கள் போலியானவை
அதில் நீ சஞ்சரிக்கமுடியாது.

உன் ஓலம்
ஒரு பறவையின் சிலுசிலுப்பு மட்டுமே.

மரத்துப்போனவர்கள்!kuneswaran@gmail.com