முதிர்வு முன் நின்ற போது

. இராஜகோபலன்

ஈரத் தளத்தில்
பாவி நடக்கப் பயங்கொள்ளூம்
பாதங்கள்

படிகண்டு தயங்கி
மடித்து
ஏற மறுக்கும்
கால்கள்

விளக்கு அணைத்ததும், வீடு பூட்டியதும் மறந்து,
மறந்து விட்டோமோ என்று,
பல சமயங்களில்
பதைப்புறும் மனது.

காலச் சுழலில்
நழுவிய இளமையைக்
கண்ணாடியில் தேடும் முகம்.

கருமை தொலைத்த
நரைமுடி வந்து
முதுமை காட்டி நகைக்கும்.

 

appan.rajagopalan@gmail.com