இது தான் காதலோ?

மன்னார் அமுதன்

உனக்கும் எனக்கும் 
இடைப்பட்ட
பொழுதுகள்
எப்போதும்
அழகாய் விடிகின்றன
கவிதையாய்

கோவப்படுகையில்
நீ
அடிப்பாய்
வலிப்பதில்லை
இன்றோ
மெளனம்
காக்கிறாய்
வலிக்கிறதே

ஒத்த கருத்தோடும்
சிந்தனையோடும்
மாற்றுக்
கருத்தில்லா
மாணிக்கங்களாய்
மிளிர
நாமென்ன
கொள்கைக்காய்
கை கோர்த்தவரா?

குடும்பச் சமையலில்
குழப்பங்கள்
தானே குழம்பு
ஊடல்கள்
தானே உப்பு

உன்னை நான் அனுசரிக்க
என்னை
நீ தினம் சகிக்க
முரண்பட்ட
கருத்துகள்
முதிர்வடையும்
வரை
நிலாவொளியில்
கதை பேசி
முடிவெடுக்காமலேயே
தூங்கிப்போவோமே
இது
தான் காதலோ?

          

amujo1984@gmail.com