பாரதிவாசன் கவிதைகள்

1.

சலனமற்ற குளத்துநீரில்
கல்லெறிந்து போனவள்
நீ.
இன்னும்
அல்லாடிக் கொண்டிருக்கிறது
பரிதாபத்திற்குரிய என் பிம்பம்.

2.

பாதை நெடுகிலும்
மனித பொம்மைகள்,
பரிதாபமாக.
சுயமிழந்து நடைபிணமாய்
அவரவர் அவரவர் போக்கில்.
யாரும் யாருடைய சுமைகளையும்
தாங்கிக்கொள்ள முடியாது.
அவரவர் சுமைகள்
அவரவர்க்கு மிகைப்படும்.
ஆனாலும்….
பகிர்ந்து கொள்ளலாம்.
நம் கவலையை அவர்களோடும்
அவர்கள் பிரச்சனையை நம்மோடும்.

3

பிப்ரவரி 14
கொண்டாடிக்கொண்டிருக்கும்
காதலர்கள் நாம்.
உன் கணவனோடு நீயும்..
என் மனைவியோடு நானும்.

 

pathiyam@gmail.com