ஒற்றைப்பனை

நாச்சியாதீவு பர்வீன்ரின் ஒதுக்குப்புறம்
இருந்தது
அந்த ஒற்றைப்பனை

கிராமம் முன்னேறி
நகரமாக
உருமாறியும்
முடுக்குப்பனையில்

முன்னேற்றமில்லை
....

முன்னர் ஒரு பருவம்
அதிகாலை
தொழுகையின் பின்னர்
பனம்பழம்
பொறுக்கும் ஆர்வத்தில்
மரத்தை
சுற்றி வட்டமிடுவதுண்டு

நொங்கு வெட்டி
ருசி
பார்த்து
விடுமுறைகளை

பனையோடு
கழித்ததுமுண்டு

பனைமட்டை கரத்தை
நொங்குக்
  கரத்தை
அந்த
வயதில் 
மண்
தெருக்களில்
புழுதி
கிளப்பும்

பனம் ஒடியல்
திண்ணும்
 போதுகளில் 
இந்த
 ஒற்றைப்பனையின் 
ஞாபகங்கள்
 
ஊடறுக்கும்
நெஞ்சில்

எத்தனை வயதிருக்கும்
இந்தப்பனைக்கு

கிழடு
தட்டி
ஆயுளின்
அந்திமத்தில்
வாழ்கிறது
இந்தப்பனை

மைனாக்களின்
மாளிகைகளும்

கிளிகளின்

அரண்மனைகளும்

இந்தப்பனையை
இன்னும்
உயிர்ப்பிக்கின்றன

ஊர் சுற்றிக்காகமும்
உல்லாச
குருவிகளும்
மொட்டைப்பனையின்

தலையில்
அவ்வப்போது
தங்கிச்செல்லும்

ஒற்றை மரம்
ஒன்றுக்கும்
உதவாது
மனிதனின்
நினைப்பில்
மண்ணள்ளிப்
போட்டது
பறவைகளின்
பகவத் கீதை

பருந்து ஒன்றின்
பகல்
போசனம்
மரத்தின்
உச்சியில் பரிமாறப்படும்

பனை இறந்து கொண்டே
உதவுகிறது

மனிதன்
இருந்து கொண்டே
உதைக்கிறான்

ஒரு அந்தி
பனையின்
பக்கத்தில் நான்
ஒரு
நூறு கதைகளோடு
பனையின்
முனங்கள்

மனிதன் சுயநலக்காரன்

 

armfarveen@gmail.com