இயக்குநர் பாலுமகேந்திரா மரணம்

நடராஜ் கண்ணப்பு

சினிமா இலக்கணத்தின் தொடக்கன்
இந்தியசினிமாவை அசைபட வழியில்
அசைத்திட்ட இயக்குனர்களின் பிதா ..

பக்கம்பக்கமாய் பேசியபடத்தை
திரை விலக்கி எம்மாத்துமாவில்
பேசும் ஒளியாக்கிய
மூடு பனி கிழித்த
மூன்றாம் பிறை...

இது முற்றுபுள்ளியல்ல
அரிவாள் வீசும் அரிதாரம் வெறுத்த
வெறும்புலம்பல்கள் அலம்பல்கள் வெருண்ட
மெய் இலக்கியத்தோடு
இலங்கைமகனின் இன்னொரு புலம் பெயர்வு.

 

yknataraj@gmail.com