குளிருறு காண்டம்-2
(பட்டுப் பனியும் கெட்ட வலிப்பும்! -இது ஒரு உண்மைக் கதை)

தீவகம் வே.இராசலிங்கம்


பட்டுப்
போற்தான் பனித்துளி ஆகும்!
கொட்டிவிட்ட
போதுதான் குவிந்தது குன்றாய்..!

பாதையை மூடிப் பரவி வீழ்ந்தது!

எச்சரிக்கைக் கீதை
இதிகாசம்
ஆனது!

ஆயின்..
மிச்சப்படிக்கு
மீள்வது எப்படி?

மண்வெட்டிக் கைகள் மறுத்துத் தூங்குமா?

கிண்டி எடுத்துக் குவித்தேன் மறுமுனை!

நெய்யெரி வண்டியை நித்திரை எழுப்பிப்
பையவே
பாதையிற்
பயணித்த
போதுதான்..?

விலாவின் ஒருபக்கம்
சலாகையாய்
வளைந்து
சரித்தது
நோவாய்..!

கூச்சலிற் கடுகதிக்
கூப்பிடும்
வண்டியும்
ஆச்சது
என்றே அங்கே உதித்தது..!

வாதை கனக்கவே
வைத்தியசாலை
வரவேற்றுக் கொண்டது..!

எத்தனை காப்பு? எத்தனை வைத்தியம்?
மொத்தமாய்
என்னை முழுங்கி எடுத்தது!
ஓடினர்
..! விரைந்தனர்..!
ஒவ்வொரு
படிவமும்
உரசிப்
பார்த்தனர்..!

இருக்கவேண்டும் இங்குநீ என்றனர்!

காய்ச்சல்.. அழுத்தம்..அமுக்கம் என்று
கணப்பொழுதுமே
தூங்கா மானுடர்..
நோய்த்த
உடம்பை நுணுகி ஆய்ந்தனர்..!

நெஞ்சுக் கூடு நிறுத்திய தாவென
அஞ்சும்
படிக்கு அத்தனை வீச்சில்
இளமையர்
..மாதினர் ..அனைத்து வைத்தியம்
கற்றுத்
தெளிந்த காக்கும் வைத்தியர்..
பிச்சுப்
பிடுங்கிப் பெரிதாய் நுணுகினர்..!

அகதியாய் நுழைந்த ஆத்மாக்கள் எல்லாம்..
சுகமது
என்றே சொல்லிய தேசம்..
வையப்புனலில்
மானிடம் சொல்லும்
மகத்துவ
தேசம்
கனடாவென்
றானதே..!

நான்குநாள் களித்தே
யானங்கு
விலகினேன்..!

ஆம்..
உயிருக்குப்
பயந்தே
ஓடினோம்
..வந்தோம்!

நன்றிக் கடனதை
கனடா
நல்கிடக்
கண்டனே..!

 

vela.rajalingam@gmail.com