தக்கது தகாததின்

வேதா. இலங்காதிலகம், டென்மார்க்.

புகழ் ஒளியின் குன்றில் இருந்திடினும்
புகையும் வறுமைக் குடிலில் இருந்திடினும்
தக்கது தகாததின் தன்மையில் தெளிவிருந்தால்
தன்னை அறிந்தால் தடுமாறும் நிலையில்லை.

கொடிக்கால் திடமாக ஊன்றி நின்றால்
கொடி உறுதியுடன் பற்றிப் படரும்.
கொள்கை உறுதியாக நிலைத்து நின்றால் கொஞ்சமும் அஞ்சாது நேர் வழியேகலாம்.

கற்தூண் நம்பிக்கை, வாழ்த்தல், இகழ்தலெனும்
காற்றின் சலனங்களால் நீறாய்ப் பறக்காது.
நாற்றாய் நிமிர்ந்து நெறியோடு வளரும்
ஓற்றைப் பாதையே ஒளியோடு மிளிரும்.

ஒரு காலில் நிற்கும் கொக்கின் திடசித்தம்
பெரும் ஆலம் விழுதாக ஊன்றும் திடசித்தம் வெற்றிப் பாதைக்கு விரிவான வழியாகும்.
பற்றிப் படர்தல் அவரவர் தெளிவாகும்.


 


vetha@stofanet.dk