வத்துக கொளத்து மீன்கள்

நாச்சியாதீவ பர்வீன்

வரண்டு போனது
வாழ்க்கை
மழை இல்லா
நாட்களை எண்ணி
மனவருத்தம் தான்
குளம் குட்டை
எங்குமே நீரில்லை
மீன்கள் மீளாத்துயரில்
வத்துக் கொளம் என்பதால்
அவை வாடிக்கிடக்கிறன
மீன் திண்ண வரும்
கொக்குகளுக்கும் குதூகலமில்லை
கோடையின் கொடூரம்
தவளைகளை கவலை
கொள்ள வைத்தது
தாமரையின் தவிப்பு
மழை வேண்டிய பிரார்த்தனை
எதுவும் எடுபடவில்லை
மீன்கள் மரணத்தை
எதிர்பார்த்து காத்துக்கிடக்கின்றன
ஒருவேளை மழை வந்தால்
மீன்கள் தப்பலாம்
வத்துக் கொளத்து மீன்களின்
வாழ்க்கை இதுதான்
சில மனிதர்களும்
வத்துக் கொளத்து மீன்கள் போல் தான்.. .