நிவிக்குட்டி கவிதைகள்

இவள் பாரதி

எல்லாவித 
அழுத்தங்களிலிருந்தும்
விடுபட
 
போதுமானதாயிருக்கிறது
குழந்தையின்
புன்னகை 

----------

உனதசைவின் 
ஒவ்வொரு
கணத்தையும்
சேகரிக்க
முயன்று
கைக்கொள்ளாமல்
கவிதையில்
பத்திரப்படுத்திவிட்டு
மீண்டும்
சேகரிக்கிறேன்

அள்ளக்குறையாத 
அட்சயப்பாத்திரமாய்
 
அசைவுகளால்
நிரப்புகிறாள்
நிவிக்குட்டி

வழிந்தோடி நிரம்பி
மூழ்கடிக்கிறது
என்னையவை
மீளத்துணியாமல்
மிதக்கிறேன்

 

ivalbharathi@gmail.com