மனத்தினால் வரவேற்போமே !

எம். ஜெயராமசர்மா -மெல்பேண்
இரண்டாயிரத்து பதினைந்தை
இன்பமுடன் வரவேற்போம்
எங்களது வாழ்வினிலே
ஏற்றமுற வேண்டுமென்று

சங்கடங்கள் போவதற்கும்
இங்கிதங்கள் வருவதற்கும்
பொங்கிவரும் புதுவருடம்
புதுமருந்தாய் அமைந்திடட்டும்

வங்கக்கடல் கடைந்த
மாதவனைக் கேசவனை
வாழ்த்திநின்ற மார்கழியை
மனமார வணங்கிடுவோம்

எங்களது வாழ்விலினிலே
மங்கலமே வருகவென
சங்குகொண்டு ஊதிநின்று
சந்திப்போம் புதுவரவை

மனங்களில் மாற்றம்வந்து
மதங்களால் அமைதிவந்து
தினம்தினம் எங்கள்வாழ்வு
திருந்திட வேண்டிநிற்போம்

புலர்ந்திடும் பொழுதுபோல
பூரிப்பு வந்துசேர
மலர்ந்திடு வருடமென்று

மனத்தினால் வரவேற்போமே !