கவிதை...

பிரபு ரஞ்சி

தென்றல் வந்து தொட்டு செல்ல
தூறல் என்னில் பட்டு விழ
துடிக்கின்ற இதயம் விழித்தது
தூவானமாய் உந்தன் அன்பு
செவ்வானமாய் சிவக்க வைத்து
செந்தூரமாய் மின்னச் செய்தது
பூவுக்குள் குடியிருக்கும் மதுவை போல
விழிக்குள்ளே நீ விழுந்து மயக்குகிறாயடி...
வேதனையில் நானும் விழுந்திடாத போதும்
விழிகளில் ஈரம் கசிகின்றதே
கரைகின்ற கண்ணீர்த்துளிகள்
எந்த நாளும் தீர்ந்ததில்லை
இதழ்களில் தீண்டிட
உன் நினைவுகள் துடிக்குதே
இமைகளில் உறக்கம் கொதிக்குதே
நிலையில்லா நீர்த்துளி போல
கனவில்லா உந்தன் கற்பனை
கட்டி முத்தம் சுமக்கட்டும்
கருணை மனு மறுக்கட்டும்
உன் விழிகளில் கைதாகி
உன் இதய கூட்டில் மரணிக்க
மணிப்பெண்ணே மகிழ்ச்சியை தந்துவிடு
மனதும் மறைந்து போகட்டும்
உன் மடியினிலே...