பூக்களின் விடுமுறை

ஏஜே டானியல் - பிரான்ஸ்



ழகு மொட்டுக்களே!
அச்சம் தவிர்த்து
அழகாய்
விரிந்திடுங்களே
பூக்காரன் வரான்
இன்று விடுமுறை
விழித்திடுங்கள்
வண்டுகளே
ஓய்வெடுங்கள்
இன்று மட்டும்
விட்டுவிடுங்கள்
பூக்களை

வண்டுகளே
பூக்களின் புகழை
நான் பாடுகின்றேன்
தென்றலே
பூவின் வாசனையை
நான் பிரச்சாரம்
செய்கின்றேன்
நீங்கள்
சென்றுவிடுங்கள்

உங்கள் புகழ்பரப்பி
கவி கட்டுகின்றேன்
என் சிறு விண்ணப்பம்
இன்றோடு எனை
குட்டிக் கவிஞனாக்குங்கள்
புது இன்பத்தில்
கலந்துவிடுவேன்...

வண்ண மலர்களே!
சஞ்சலம் வேண்டாம்
இனி தவிப்புகளில்லை
வாசம் வீசுங்கள்
பூமியெங்கும்
இன்று மனிதன்
மரிக்கவில்லை
கோவில்
வாசல்கள்
திறக்கவிலை
அர்ச்சனை
பூக்கள் வேண்டாம்
யாரும் புஸ்பவதி
ஆகவுமில்லை
ஒட்டு
கலப்புத்திருமணமில்லை
உச்சாகம் பெறுங்கள்
உங்கள் ஆயுட்காலம்
கொஞ்சம் நீளட்டுமே...

பூக்களே
இன்று நான்
உங்கள் விருந்தாளி
எனை மகிழ்வூட்டுங்களே
இன்ப உபசரிப்பில்
நெகிழ்ந்துபோகிறேன்
மலர்களே
வருகின்றேன்
உங்களைத்தேடி.....

உங்கள்
மெல்லிய மடல்களில்
படுத்துருண்டு
இன்பமடைகின்றேன்
கம்பளம் போன்ற
மேற்பரப்பில்
துள்ளி விளையாடி
மகரந்தத்தண்டி வழியே
தேன் குளத்துள் மூழ்கி
தேன் குடிக்கின்றேன்
அடடா
இயற்கையன்னையின் மிக
உன்னத பிரசவிப்பு
இந்தப்பூக்கள்
எத்துணை
இன்பமடா மனிதா..!

பூக்களைமதிக்கின்ற
தேசங்கள் வேண்டும்
உலகம் பூக்களால்
நறுமணம் வீசட்டும்
மனிதா பூக்களை நேசி
வன்முறை வேண்டாம்
துப்பாக்கி பிடிக்கின்ற கைகள்
இனி பூச்செண்டு பிடிக்கட்டும்
நான் பெற்ற இன்பம்
இவ்வுலகம் பெறட்டும்..!