உன் சேலையில் என் மனசு
 
ராஜகவி ராகில்
 


 
 ன் அழகு
 
நதி
 
அத்தனை மீன்களுக்கும்
 
ஆசை
 
அதற்குள் வாழ
 
 
நீ
 
எது விதைத்தாலும்
 
முளைக்கும்
 
பூக்கள் மட்டும்
 
 
உதிர்ந்து
 
உன்னில் விழுந்த
 
இலை
 
பறந்து சென்றது
 
பட்டாம் பூச்சியாகி
 
 
நீ
 
வீதியில் நின்றால் போதும்
 
யாரும்
 
செல்ல மாட்டார்கள்
 
மதுக்கடைக்கு
 
 
வீட்டுக்குள் இருந்த
 
உன்னில்
 
நனைய முடிய வில்லை
 
என்ற கவலையில்
 
பெய்தது
 
மழை
 
 
புயலை விட
 
பல மடங்காக வீசுகிறது
 
உன் அழகு
 
பார்ப்பவர்கள் விழுகிறார்கள்
 
தொப்பென
 
 
எல்லாருமே கவிஞர்கள்தான்
 
நீ வாழுகின்ற
 
ஊரில்
 
 
வயலில்
 
அரிசி மணிகள் விளைந்தன
 
உன்
 
பல்லழகு
 
பார்த்திருக்குமாக்கும்
 
 
இருளை
 
மிக மிக நேசிக்கிறேன்
 
உன் கூந்தலை
 
நினைவூட்டுகிறதே .
 
 
 rajakavirahil@gmail.com