தும்பிகள் செய்த பொம்மைகள்
 
சுசீந்திரன்


ழைப்பிதழ்களுக்குள் அடங்காத
தேகத்திரிகள்
படிமங்களில் தொலைத்தவைகளை
தனிமங்களில் தேட
வாழ்க்கை கசந்து கனியறும்

கத்தியைத் தூரவீசி
கணியன் பூங்குன்றனாரின்
யா.ஊ. வையும்
யா.கே. யையும் கையிலேந்தி
கைகுவித்து வாழ்த்தினர் கசடரும்.

அதிகாலைகோழிகள்
காலையில் சிறிது கூவி
மாலைக்கு மீதி வைத்தன
இல்லாத வானத்தை
இருப்பது போல் பாவித்து
-உச்சிமீது வானிடிந்து- என்று
பாரதி பாடியதால்

பண்டமாற்றுக்கு பழக்கப்பட்டவன்
பிண்டங்களின் சுவாச மூச்சிக்கு
செயற்கையை ஊட்டினான்
இவ்வண்ண நாணயச் சாலைகளில்
பிராணவாயுவை தேடியதால்.

இந்த காட்டு பூவுக்கும்
நாட்டு பூவுக்கும் என்ன வித்தியாசம்
என் நண்பன் சொன்னான்
ஏழை வீட்டு இரும்பு பெட்டிக்கும்
எசமான் வீட்டு இரும்பு பெட்டிக்கும்
உள்ள வித்தியாசம்

இதையே ஒரு கவிஞன்
இப்படி சொன்னான்:
முதலாவது -இல்லாத வானம்
இருப்பதாகப் பாடிய பாரதி.
இரண்டாவது -இருக்கின்ற இடுப்பை
இல்லாதது போல் பாடிய சினிமாபாரதி .suchindran1960@yahoo.in